பிரபல நடிகை தன் குழந்தையை உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மயக்கம் என்ன’ எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். இதை தொடர்ந்து இவர் சிம்புவுடன் இணைந்து நடித்த ஒஸ்தி திரைப்படம் மாபெரும் ஹிட்டடித்தது. அதன்பின் ஜியோ என்பவரை திருமணம் செய்துகொண்டு ரிச்சா வெளிநாட்டில் வாழ்ந்து வரும் நிலையில் கடந்த சில மாதங்கள் முன்பு அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்தோடு வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் கடந்த மே 27ம் தேதி பிரபல நடிகை ரிச்சா ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அவர் தனது அழகிய குழந்தைக்கு லூகா என்று பெயர் வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் அவர் தன் குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து உலகிற்கு அறிமுகம் செய்து உள்ளார். இதைதொடர்ந்து ரிச்சாவிற்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.