வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராவார். இவர் நெல்சன் இயக்கி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.
இந்நிலையில், இந்த படத்திற்கு கதாநாயகி யார் என்பது குறித்த அறிவிக்கப்படாத நிலையில், தற்போது இப்படத்தில், விஜய்க்கு கதாநாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பைரவா, சர்க்கார் போன்ற படங்களில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.