Categories
இந்திய சினிமா சினிமா

சொந்த அண்ணனையே கொலை செய்த பிரபல நடிகை…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

காதலுக்காக சொந்த அண்ணனையே கொலை செய்த பிரபல நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள தார்வார் மாவட்டம் பகுதிக்கு அருகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தலை இல்லாமல் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆணின் சடலம் கிடந்துள்ளது. இதனை அறிந்து சம்மந்தப்பட்ட இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு இந்த கொடூர செயல் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அந்தவகையில் இறந்து கிடந்த நம்பரை யாரோ கொடூரமாக கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி காரில் கொண்டு வந்து சாலையோரம் வீசி சென்று இருப்பது கண்டறியப்பட்டது.மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட மனிதர் யார் என்றால், கர்நாடகத்தில் பிரபல நடிகையாக இருக்கும் ஷான்யா காடவேயின் அண்ணன் ராகேஷ் என்பது தெரியவந்துள்ளது. நடிகை ஷான்யா தனது மேலாளர் நியாஜ் அகமது என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

ஆனால் தங்கை அவரை காதலிப்பது அண்ணன் ராக்கேஷ்க்கு பிடிக்கவில்லை. இதனால் பிரபல நடிகை ஷான்யா தனது அண்ணனை கொலை செய்ய முடிவு செய்து காதலர் நியாஜ் அகமது விடமும் தெரிவித்தார். இதற்கு காதலனும் ஒப்புக்கொண்ட நிலையில் கூலிப்படை உதவியுடன் அவர்கள் இந்த கொடூர செயலை செய்துள்ளனர்.

இதனை கண்டறிந்த காவல்துறையினர் கூலிப்படையான தவுசிப் அகமது, அல்தாப் தாஜுத்தின் முல்லா, முகமது உருவா கிரினிவாலே, மாலிக், சைதிப்புத்தீன், பீரோஜ் ஆகியோரையும், நடிகை ஷான்யாவையும், அவரது காதலன் நியாஜ் அகமதுவையும் கைது செய்தனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.

Categories

Tech |