Categories
சினிமா தமிழ் சினிமா

திடீரென சம்பளத்தை உயர்த்திய பிரபல நடிகை…. இது தான் காரணமாம்…!!!

பிரபல நடிகை ராஷி கண்ணா தனது சம்பளத்தை திடீரென உயர்த்தியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் நடிகைகள் தங்களது சம்பளத்தை உயர்த்திக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு பிரபல நடிகை தனது சம்பளத்தை திடீரென உயர்த்தியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா.

இப்படத்தை தொடர்ந்து அயோக்கியா, அடங்கமறு, சங்க தமிழன் என ஹிட் படங்களில் நடித்த இவர் தற்போது பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.

இதனால் நடிகை ராஷி கண்ணா தனது சம்பளத்தை திடீரென உயர்த்தியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. அதன்படி தான் புதிதாக நடிக்கவிருக்கும் படத்திற்கு அவர் ஒரு கோடிக்கு மேல் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |