Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை கியாரா அத்வானி, நடிகர் சித்தார்த் ஜோடிக்கு விரைவில் திருமணம்…. ரசிகர்கள் வாழ்த்து….!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் கியாரா அத்வானி. இவர் தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் எம்.எஸ் தோனி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார். இதேபோன்று சித்தார்த்தும் நடிகை க்யாராவை காதலிக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற காபி வித் கரன் நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா கலந்து கொண்டார்.  அவரிடம் கியாராவுடன் எப்போது திருமணம் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு நாங்கள் எங்களுடைய எதிர்கால வாழ்க்கையை பற்றி பல நாட்களாக திட்டமிட்டு வருகிறோம். சரியான நேரம் வரும்போது நாங்கள் எங்களுடைய எதிர்காலம் திட்டம் பற்றிய தகவலை வெளியிடுவோம் என்று கூறியுள்ளார். இதனால் கியாரா  மற்றும் சித்தார்த் திருமணம் செய்து கொள்வது உறுதியாகியுள்ளது. மேலும் தற்போது கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்கோத்ராவுக்கு அடுத்த மாதம் அதாவது டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் இந்த நட்சத்திர ஜோடிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |