Categories
சினிமா

பிரபல பாலிவுட் நடிகர் திடீர் மரணம்….. உடற்பயிற்சி செய்யும் போது ஏற்பட்ட விபரீதம்…‌‌ அதிர்ச்சியில் திரையுலகினர்…..!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் சித்தார்த். இவர் kkusum, kasauti zingadi key‌ போன்ற சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். இந்நிலையில் நடிகர் சித்தார்த் ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்து விட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் சித்தார்த்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்குசித்தார்த்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.

உடற்பயிற்சி செய்யும் போது அதிக அளவில் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக சித்தார்த் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் பிறகு 46 வயதாகும் நடிகர் சித்தார்த் இன்று காலை 11 மணியளவில் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த தகவல் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |