பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் வீணா கபூர் (74). இவர் ஏராளமான படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் இருக் கும் நிலையில் மூத்த மகன் அமெரிக்காவில் வசித்து வரும் நிலையில் 2-வது மகன் சச்சின் (42) தன்னுடைய தாயார் வீணாவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வீணா கபூர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி அவரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த போலீசார் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து சோதனை நடத்தியதில் வீணா பயன்படுத்திய செல்போன் அவர்களுக்கு கிடைத்தது.
இந்நிலையில் வீணாவின் மகன் சச்சினை காவல்துறையினர் பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது சொத்து தகராறில் சச்சின் தன்னுடைய தாயை பேஸ் பால் பேட்டால் பலமுறை அடித்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். அதன் பிறகு தன்னுடைய தாயாரின் உடலை ராய்காட் மாவட்டத்தில் உள்ள ஆற்றில் சச்சின் வீசியுள்ளார் என்பதை விசாரணையில் தெரிய வந்த நிலையில், சச்சின் தன்னுடைய குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், வீணா குமாரின் மறைவுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.