Categories
இந்திய சினிமா சினிமா

அரசியலில் நுழையும் பிரபல பாலிவுட் நடிகை…. என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க….!!!!

திகங்கனா சூர்யவன்ஷி பிரபல பாலிவுட் நடிகையாக அறிமுகமானார். இவர் ஹிப்பி படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து தனுசு ராசி நேயர்களே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இதனையடுத்து, இவர் அரசியலில் நுழைய இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தந்த மாநிலத்தில் உள்ள கட்சி பிரமுகர்கள் இந்த நடைபயணத்தில் கலந்து கொண்டு வருகின்றனர். தற்போது, ராஜஸ்தானில் நட பயணம் மேற்கொண்டுள்ள இந்த பயணத்தில் நடிகை திகங்கனா கலந்து கொண்டார்.

இவர் ராகுலின் கையை பிடித்தவாறு நடக்கும் வீடியோ பதிவு சமூக வலைதளத்தில் தீயாக பரவியது. இதனால் இவர் அரசியலுக்கு வர போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நடிகை திகங்கனா கூறுகையில், ‘இந்த பயணம் எதிர்பாராத விதமாக அமைந்தது. நாட்டின் ஒற்றுமைக்காக ராகுல் மேற்கொண்டுள்ள இந்த பயணத்தில் நான் ஒரு பங்கு வகித்தேன் அவ்வளவுதான்’ என கூறியிருக்கிறார்.

Categories

Tech |