‘மாநாடு’ திரைப்படத்தின் ரீமேக் குறித்த அசத்தலான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சிம்பு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது.
மேலும், இந்த படத்தில் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடித்து ரசிகர்களிடையே நல்ல பாராட்டைப் பெற்றார். இந்நிலையில், இந்த திரைப்படத்தின் ரீமேக் குறித்த அசத்தலான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் அனைத்து இந்திய மொழிகளுக்கான ரீமேக் மற்றும் டப்பிங் உரிமையை பிரபல நிறுவனமான சுரேஷ் ப்ரொடக்ஷன் கைப்பற்றி இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
— Suresh Productions (@SureshProdns) January 6, 2022