‘சாணிக்காகிதம்’ படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். பல படங்களை இயக்கிய இவர் தற்போது நடிகராக ”சாணிக்காகிதம்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
இதனையடுத்து, இந்த படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ‘விக்ரம் வேதா’, ‘கைதி’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த சாம் சி.எஸ் இந்த படத்தில் இசையமைப்பாளராக இணைவதாக இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.
இப்படத்தில் இணைவது பெருமையின் உச்சம்..!
Happy to work with a talented team of #Saanikaayidham 🎼
Tnkq so much @arunmatheswaran 🤗@Screensceneoffl 💐@sidd_rao @selvaraghavan @KeerthyOfficial @yaminiyag @ramu_thangaraj @Inagseditor @kabilanchelliah @Jagadishbliss https://t.co/BAl05ZQ6tt pic.twitter.com/YE7rFYWTvH
— 𝐒𝐀𝐌 𝐂 𝐒 (@SamCSmusic) November 5, 2021