ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னால் வீரருக்கு சொந்தமான மதுபான ஆலையில் ஜின்னுக்கு பதிலாக சனிடைசர் தயாரிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான போர்ட் வார்ன் என்பவருக்கு சொந்தமாக அந்தநாட்டில் சில பகுதிகளில் மதுபான ஆலைகள் இயங்கி வருகிறது. தற்போது இந்த ஆலைகளில் மதுவிற்கு புகழ் பெற்ற ஜின்னுக்கு பதிலாக சனிடைசர் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அவரிடம் கேட்கையில், அவர் இவ்வாறு தெரிவித்தார். அதில், எனக்கு சொந்தமான மதுபான ஆலையில் 78 ரக ஜின் உலகப் புகழ் பெற்றது. தற்போது கொரோனோ தாக்கம் அதிகமாக இருப்பதால், அதை தயாரிக்கும் பணியை நிறுத்திவிட்டு சனிடைசரை எங்கள் நிறுவனம் தயாரித்து அரசுக்கு வழங்கி வருகிறது என்று தெரிவித்தார். இவரது இந்த செயலுக்கு பல தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.