பிரபல இயக்குனர் ஏபி ராஜ் காலமானதால் திரையுலகினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
பிரபல இயக்குனரும், நடிகை சரண்யா பொன்வண்ணனின் தந்தையுமான ஏபி ராஜ் வயது முதிர்வினால் இன்று காலமானார். 95 வயதுடைய இவர் இதுவரை 65 மலையாள படங்களை இயக்கியுள்ளார்.. அதுமட்டுமில்லாமல் நாகேஷ் நடித்த கைநிறைய காசு, துள்ளி ஓடும் புள்ளி மான் ஆகிய தமிழ்ப் படங்களையும் இயக்கியுள்ளார்.
மேலும் bridge of river kwai என்ற ஆங்கில படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.. இவரது மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்