மும்பை கிளம்பிய ரஜினியை பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் ரஜினியின் வீடு உள்ளது. அங்கு சென்ற கே.எஸ்.ரவிக்குமார், ரஜினியுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது, இந்நிலையில் அடுத்த படத்தில் இருவரும் மீண்டும் இணையவுள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும் கே.எஸ்.ரவிக்குமார் ரஜினியை வைத்து இறுதியாக இயக்கிய படம் லிங்கா, இது நாம் அனைவரும் அறிந்ததாகும்.