Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனரின் தாயார் மறைவு…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!

பிரபல இயக்குனரின் தாயார் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான “இன்று நேற்று நாளை” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரவிக்குமார். அவர் எடுத்த முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றியை அளித்தது. தற்போது அவர் சிவகார்த்திகேயனின் “அயலான்” படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் ரவிகுமாரின் வீட்டில் ஒரு சோக நிகழ்வு நடந்துள்ளது. ரவிக்குமாரின் தாயார் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.

இயக்குனர் ரவிக்குமாரின் தாயார்

இந்த தகவலை இயக்குனர் ரவிக்குமாரின் நண்பரும், பிரபல இயக்குனருமான கவுரவ் நாராயணன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரவிக்குமாரின் தாயார் மறைவிற்கு பல திரை பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |