Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏழைகளுக்காக பாடுபட்டவர்… புகழ்பெற்ற மருத்துவர் மரணம்… தனதாக்கிய விருதுகள்…!!

புகழ்பெற்ற புற்று நோய் மருத்துவரான டாக்டர் சாந்தா உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவராக டாக்டர் சாந்தா பணிபுரிகிறார். புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணராக இவருக்கு 93 வயது ஆன போதிலும் ஏழை, எளிய மக்களுக்காக புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்கும் வண்ணம் மிகவும் கடுமையாக உழைத்துள்ளார். இந்நிலையில் மூச்சுத்திணறல் மற்றும் இதய நோய் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாந்தா சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்து விட்டார்.

இவரின் தன்னலமற்ற மருத்துவ சேவைக்காக மகசேசே மற்றும் பத்ம விபூஷண் விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் புற்றுநோய் குறித்த சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிக்காக உலகப் புகழ் பெற்றவராவார். இதனையடுத்து டாக்டர் சாந்தாவின் உடலானது அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |