சென்னையில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆலயம் ஸ்ரீ ராம் மாரடைப்பால் மரணமடைந்தார்.
ஆலயம் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து உருவாக்கியவர் 60 வயதான ஸ்ரீராம். அந்நிறுவனம் சார்பில் முதல் படமாக விஜயகாந்த் நடித்த ‘சத்ரியன்’ படம் உருவானது. அதன்பின் மணிரத்னம் இயக்கத்தில் ‘திருடா திருடா’, ‘பாம்பே’ ஆகிய படங்களை தயாரித்தது. நடிகர் தல அஜித் குமாருக்கு ஆரம்ப காலத்தில் முக்கியமான படமாக அமைந்த ”ஆசை” படத்தை தயாரித்து ஆலையம் நிறுவனம் தான். இந்நிறுவனம் கடைசியாக தயாரித்து வெளியான கடைசி படம் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான ”சாமுராய்”.
இந்நிலையில் தன்னுடைய மனைவி நளினி ஸ்ரீராம் மற்றும் மகன் நிகில் உடன் வசித்து வந்த ஸ்ரீ ராம் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவு குடும்பத்தினர் மற்றும் திரையுலகினருக்கு மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீராமன் இறுதிச் சடங்கு நாளை காலை நடைபெறும் என தகவல்கள் வெளிவந்துள்ளது. இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்