பிரபல நடிகர் வெங்கியின் மறைவிற்கு சின்னத்திரை நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வெங்கி மங்கி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற வெங்கி நேற்று இரவு காலமானார். கையிலுள்ள குரங்கு பொம்மை பேசுவது போல பேசும் குரலுக்கு சொந்தக்காரரான இவர் முதலில் மாயக்குரல் கலையை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர். 90களில் பிறந்தவர்களுக்கு இவர்தான் ஹீரோ. அவரது மறைவுக்கு சின்னத்திரை நடிகர்-நடிகைகள் சினிமா மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.