Categories
சினிமா

பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் 44 வயதில் திடீர் மரணம்…. அதிர்ச்சியில் திரையுலகினர்….. இரங்கல்….!!!!!

மலையாள சினிமாவில் பிரபலமான ஒளிப்பதிவாளராக திகழ்ந்தவர் சதீஷ் பப்பு. இவரை அனைவரும் செல்லமாக பப்பு என்று அழைத்தனர். இவர் துல்கர் சல்மானின் செகண்ட் ஷோ என்ற திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அதன் பிறகு கூதரா, ரோஸ் கிடாரினால், ஈனா, நான் ஸ்டீவ் லோபஸ் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் கடைசியாக அப்பன் என்ற திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் 44 வயதான சதிஷ் அமிலாய்டோசிஸ் எனும் அரிய வகை நோயினால் பாதிக்கப் பட்டிருந்தார். இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சதீஷ் நேற்று திடீரென மரணம் அடைந்தார். இவருடைய மரணம் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் சதீஷின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள் ‌

Categories

Tech |