பிக் பாஸ் சீசன் 5ல் பிரபல மாடல் அழகி பங்கேற்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்து முடிந்த இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கூடிய விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் பிக் பாஸ் 5 கான புரோமோவும் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் இந்த சீசனில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக பங்கேற்க போகிறார்கள் என்று பல பிரபலங்களின் பெயர்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி பிரபல மாடல் அழகி நமீதா மாரிமுத்து பிக்பாஸ் 5ல் பங்கேற்க இருக்கிறார் என்ற தெரியவந்துள்ளது.