அமெரிக்க நாட்டில் பிரபலமான பாப் பாடகிக்கு நடந்த மூன்றாம் திருமணத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க நாட்டின் பிரிட்னி ஸ்பியர்ஸ் என்ற பாப் பாடகி மிகவும் பிரபலமானவர். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் அவர் தற்போது மூன்றாவதாக சாம் அஸ்காரி என்ற தன் நெடுங்கால நண்பரை திருமணம் செய்திருக்கிறார்.
அவர், தன் திருமணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.