பிரியங்கா புதிய விளம்பர படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார். தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை தொகுப்பாளர் மாகாபா உடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், தொகுப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது நடிப்பிலும் ஆர்வம் காட்டியுள்ளார். அதன்படி, மிர்ச்சி செந்திலுடன் இவர் புதிய விளம்பர படத்தில் இணைந்து நடித்துள்ளார். இதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.