கொலை கொள்ளை செய்து வந்த பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்
காஞ்சிபுரம் மாவட்டம் அமராவதி பட்டினத்தைச் சேர்ந்தவர் கருணாகரன் ரவுடியான இவர் மீது சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொலை கொள்ளை வழிப்பறி கொலை முயற்சி போன்ற 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையம் மற்றும் காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர் கருணாகரனை கைது செய்து வேலூரில் உள்ள சிறையில் அடைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் கருணாகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காஞ்சிபுரம் சூப்பிரண்ட் போலீஸ் சாமுண்டீஸ்வரி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார்.
அதன்பேரில் மாவட்ட கலெக்டர் பொன்னையா கருணாகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆணை பிறப்பித்துள்ளார். அந்த ஆணையை பாலுசெட்டி காவல்துறையினர் வேலூர் சிறையில் ஒப்படைத்துள்ளனர்.