பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர்கள் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் மட்டுமே. அதிலும் குறிப்பாக பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
குடும்ப பாசம் அண்ணன் தம்பி பாசம் போன்றவற்றை கொண்ட இந்த சீரியல் டிஆர்பியிலும் முன்னணி வகிக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவியாவும், அவருக்கு கொழுந்தனாக நடித்து வரும் கண்ணனும் ஒன்றாக சேர்ந்து செல்பி புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.