பிக் பாஸ் சீசன் 5இல் பிரபல சீரியல் நடிகை பங்கேற்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்து முடிந்த இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் எப்போது ஒளிபரப்பு என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதன்படி இந்நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் இறுதியில் ஆரம்பமாகும் என்றும் சில தகவல் வெளியாகி வருகிறது. யாரெல்லாம் இந்த சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்க போகிறார்கள் என்ற லிஸ்டில் ஒரு சில பிரபலங்களின் பெயர்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது சின்ன தம்பி சீரியல் மூலம் பிரபலமான பவானி ரெட்டியும் பிக் பாஸ் 5இல் பங்கேற்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.