நடிகை சந்திரா லட்சுமணன் டோஷ் கிறிஸ்டியை நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டார்.
நடிகை சந்திரா லட்சுமணன் மலையாள சின்னத்திரையில் பிரபல நடிகை ஆவார். இவர் தமிழில் தில்லாலங்கடி, ஏப்ரல் மாதத்தில், அதிகாரம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.மேலும், கோலங்கள், வசந்தம், துளசி, சொந்தபந்தம் மற்றும் பல தொடர்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், 38 வயதாகும் சந்திரா இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நிலையில், தற்போது அவருடன் நடிக்கும் டோஷ் கிறிஸ்டியை நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டார். இவரின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.