Categories
மாநில செய்திகள்

கவலைக்கிடமான நிலையில் பிரபல பாடகர்… வருத்தத்துடன் வீடியோ பதிவு வெளியிட்ட மகன்…!!

பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பி பாலசுப்ரமணியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை மிக மோசமாக உள்ளது என எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாடகர்  எஸ்.பி பாலசுப்ரமணியம்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை மோசமான நிலையில் தொடர்ந்து வருவதாகவும், எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும் அவரது மகன் எஸ்பிபி சரண் மிக கவலையுடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சரண் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், உலக மக்களின் பிரார்த்தனையால்  தந்தை மீண்டு மறுபடியும் வருவார் என தமக்கு நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளார். மேலும் தமது தந்தைக்காக பிரார்த்தனை செய்பவர்களுக்கு நன்றி சொல்ல தமக்கு வார்த்தைகள் இல்லை என்றும் எஸ்பிபி சரண் மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Categories

Tech |