சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வரும் சின்மயி அண்மையில் ஒரு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் இன்ஸ்டாகிராமில் சிறுவன் ஒருவன் எனக்கு பாலியல் உணர்வு ஏற்பட்டு இருப்பதால் உங்களின் நிர்வாண புகைப்படங்களை அனுப்புங்கள் என்று கேட்டுள்ளார். இதற்கு சற்றும் கோபப்படாமல் சின்மயி பொறுமையாக பதில் ஒன்றை அளித்துள்ளார். அந்த பதிலில் உங்களுக்கு பாலியல் உணர்வு எழுந்தால் சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் ஆலோசனை செய்யுங்கள் என்று கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் பெண்களிடம் எப்படி பேசவேண்டும் என்று கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த உரையாடலை ஸ்கிரீன்ஷாட் எடுத்தும் அவர் வெளியிட்டுள்ளார் .அவரின் ட்விட்டர் பக்கத்தில் “நீங்கள் பெற்றோராக இருந்தால் உங்கள் குழந்தையை மிகுந்த கவனத்துடன் வளருங்கள். அவர்களிடம் மனம் திறந்து பேசுங்கள், உடலுறவு என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் குறித்தும் அவர்களுக்கு புரிய வையுங்கள். இது பற்றி பேசுவதற்கு உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் அது சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் ஆலோசனைக்கு அழைத்துச் செல்லுங்கள்” என்று அவர் அறிவுரை கூறியுள்ளார்.