தவறி விழுந்த பிரபல வில்லன் நடிகர் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருப்பவர் பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ். குறிப்பாக இவர் விஜயின் கில்லி படத்தில் மிகவும் அற்புதமாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து படங்களில் நடித்து வரும் பிரகாஷ்ராஜ் அவரது வீட்டில் தவறி விழுந்ததால் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அறுவை சிகிச்சை செய்வதற்காக ஹைதராபாத் செல்வதாகவும் தனக்காக வேண்டிக் கொள்ளுமாறும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
A small fall.. a tiny fracture.. flying to Hyderabad into the safe hands of my friend Dr Guruvareddy for a surgery. I will be fine nothing to worry .. keep me in your thoughts 😊😊😊🤗🤗🤗
— Prakash Raj (@prakashraaj) August 10, 2021