Categories
விளையாட்டு

இனி சாதிக்க எதுவுமில்லை… ஓய்வு பெறுகிறார் ‘த அண்டர்டேக்கர்’..!!

புகழ்பெற்ற மல்யுத்த விளையாட்டு வீரரான, ‘த அண்டர்டேக்கர்’ (The Undertaker) போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

3  தசாப்தங்களாக மல்யுத்த விளையாட்டில் கொடிகட்டிப் பறந்து வந்தவர் தான் ஜாம்பவான் ‘த அண்டர்டேக்கர்’..  இவர் WWE போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தற்போது அறிவித்துள்ளார்.. தன்னைப் பற்றிய ‘அண்டர்டேக்கர்: த ஃபைனல் ரைடு’ ஆவணப்படத்தின் கடைசி அத்தியாயத்தில், தனது ஓய்வு செய்தியை அவர் அறிவித்திருக்கிறார். இது குறித்து, தான் மீண்டும் ரிங்கிற்குள் செல்லாததால் நிம்மதியாக இருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Have no desire to get back in the ring: The Undertaker hints at ...

‘என்னுடைய வாழ்க்கையில் இந்தத் தருணத்தில், மீண்டும் ரிங்கிற்குள் செல்லும் ஆசை எனக்கு கிடையாது. நான் இப்போது வேறு இடத்திற்குப் பயணிக்க வேண்டிய கௌ பாய் (cowboy)ஆக உணர்கிறேன்’ என்றும் அண்டர்டேக்கர் தெரிவித்துள்ளார்.

த அண்டர்டேக்கர்

மார்க் கால்வே எனும் இயற்பெயர் கொண்ட அண்டர்டேக்கர், தனது பெயர் குறித்து ஆவணப் படத்தின் 5ஆவது மற்றும் இறுதி அத்தியாயத்தில் கூறியுள்ளார்..

5 Reasons why The Undertaker announced his retirement from WWE in ...

‘நான் இங்கு ஜெயிக்கவும் சாதிக்கவும் இனி எதுவுமில்லை. இந்த விளையாட்டு மாறி விட்டது. புதிய தோழர்கள் வர வேண்டிய நேரம் இது. இதுவே சரியான நேரம். இந்த ஆவணப்படம் இதனைக் கண்டுபிடிக்க, எனக்கு உண்மையில் உதவியுள்ளது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.. முன்னதாக WWEஇல் அண்டர்டேக்கரும், ஏ.ஜே.ஸ்டைல்ஸும் கடந்த ஏப்ரல் மாதம் போட்டியிட்டனர். அதுவே, அவரது இறுதிப் போட்டியாக அமைந்தது.

Categories

Tech |