ஜப்பானில் ஒரு நபர் ஒலிம்பிக் போட்டியை நேரில் கண்டு உலக சாதனை படைக்க விரும்பிய நிலையில், அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த 45 வயதுடைய கசுனோரி தகிஷிமா என்ற நபர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை காண சுமார் 40 ஆயிரம் டாலர்களுக்கு டிக்கெட்டுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் கொரோனா காரணமாக ரசிகர்களுக்கு, ஒலிம்பிக் போட்டிகளை நேரில் காண அனுமதி கிடையாது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது.
எனவே ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்த்து உலக சாதனை படைக்க நினைத்த கசுனோரி பல வருடங்களாக பணம் சேகரித்து வந்திருக்கிறார். இவர் தற்போது வரை சுமார் 106 ஒலிம்பிக் போட்டிகளை நேரில் பார்த்திருக்கிறார். இந்த தடவையும் 28 போட்டிகளை காண 100 டிக்கெட்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து வாங்கியிருக்கிறார்.
தற்போது அவரின் கனவு கனவாகவே போனது. எனவே கண்ணீர் விட்டு அழுது வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார். எனினும் அடுத்த வருடம் பெய்ஜிங் நகரில் மற்றும் 2024 ஆம் வருடத்தில் பாரிஸ் நகரில் நிகழும் ஒலிம்பிக் போட்டிகளை காண்பதற்கு காத்திருக்கிறார். அவர் டிக்கெட்டுக்கு செலுத்திய பணம் திரும்ப அவரிடம் வழக்கப்பட்டுவிடும்.