பேன்சி கடையில் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பேன்சி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சரவணன் கடை மற்றும் பக்கத்து கடையில் அடிக்கடி திருட்டு சம்பவம் நடந்து வந்துள்ளது. இதனால் அங்கு இரவு காவலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் அதிகாலையில் ஒருவர் கடையை மூடி இருந்த தார்ப்பாயை திறந்து கடை உள்ளே சென்று பணப் பெட்டியிலிருந்து பணத்தை திருடியுள்ளார்.
அப்போது காவலில் இருந்தவர்கள், அந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து கோவில் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து அந்த வாலிபரிடம் விசாரித்தபோது அவர் பாளையங்கோட்டை பகுதியில் வசிக்கும் கார்ர்த்திசன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திசனை கைது செய்ததோடு அவரிடமிருந்த ரூ.500-யும் பறிமுதல் செய்தனர்.