Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வீட்டு விசேஷத்திற்கு அழைக்காததால்…. வியாபாரிக்கு நடந்த கொடூரம்…. தொழிலாளி கைது

ஃபேன்சி வியாபாரியை கத்தியால் குத்தி கொலை செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விடிவெள்ளி நகரில் முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஃபேன்ஸி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஊர் ஊராக ஃபேன்ஸி பொருட்களை இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு சத்யா என்ற மனைவியும், திவ்யதர்ஷினி என்ற மகளும், ஆகாஷ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் முனியப்பனும் விடிவெள்ளிநகரில் வசிக்கும் ஈஸ்வரன் என்ற தொழிலாளியும் உறவினர்கள். கடந்த 6-ஆம் தேதி முனியப்பன் தன் மகள் திவ்யதர்ஷினிக்கு ஒரு மண்டபத்தில் வைத்து மஞ்சள் நீராட்டு விழா நடத்தினார்.

இந்த விழாவிற்கு முனியப்பன் ஈஸ்வரனை அழைக்கவில்லை. மேலும் முனியப்பனுக்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் விடிவெள்ளி நகரில் உள்ள கங்கை முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முனியப்பன் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ஈஸ்வரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முனியப்பனின் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த முனியப்பனை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு முனியப்பனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முனியப்பனின் மனைவி பொம்மிடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முனியப்பனின் உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனைதொடர்ந்து காவல்துறையினர் ஈஸ்வரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |