Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இன்னுமா நம்புறீங்க?…. “பவர்ஃபுல் பேட்டர் பண்டுக்கு வாய்ப்பு”…. கிண்டல் செய்து சஞ்சுக்கு ஆதரவாக கொந்தளிக்கும் ரசிகர்கள்..!!

சஞ்சு சாம்சனை புறக்கணித்து ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு வழங்கி வருவதாக நிர்வாகம் மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்..

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி  கிறிஸ்ட் சர்ச் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி தொடக்கம் மிடில் ஆர்டர் சரியாக இல்லாததால் 47.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும்  இழந்து 219 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 51 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 49 ரன்களும் எடுத்தனர்..

இதையடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து அணி 18 ஓவரில் ஒரு விக்கெட் இழந்து 104 ரன்கள் எடுத்த நிலையில், மழை வந்ததால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. பின் ஆலன் 57 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.. கான்வே 38* ரன்களுடனும், வில்லியம்சன் ரன் எடுக்காமலும் இருந்தனர். நியூசிலாந்து அணி 18 ஓவரில் 104/1 என இருந்தது. இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.  இதனால் நியூசிலாந்து தொடரை 1-0 என கைப்பற்றியது.

 

 

இப்போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லை, தொடக்கம் மோசமாக இருந்தது. அதேபோல மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட் வழக்கம் போல சொதப்பி 16 பந்துகளில் 10 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.. அதே நேரத்தில் சாம்சன் இந்த போட்டியில் ஆடவில்லை, அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் அவரை வெளியே உட்கார வைத்துள்ளனர். இதனால் ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றன.ர் தொடர்ந்து சொதப்பி வரும் பண்டுக்கு வாய்ப்புகளை வழங்கும் பிசிசிஐ ஏன் சஞ்சுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என ட்விட்டரில் #JusticeForSanjuSamson என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.. மேலும் #RishabhPant என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி ரொம்ப டேஞ்சரான பேட்ஸ்மேன் என கிண்டல் செய்து விமர்சித்து வருகின்றனர்..

நியூசிலாந்துக்கு வந்துள்ள இந்திய அணி 3 டி20 போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரின முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. அதேபோல 3ஆவது டி20 போட்டியிலும் வாய்ப்பு கொடுக்கவில்லை. அதனை தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

அதில் அவர் சிறப்பாக ஆடி 38 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் 2ஆவது ஒருநாள் போட்டியில் வாய்ப்பு வழங்கவில்லை. இந்நிலையில் தற்போது 3ஆவது ஒருநாள் போட்டியில் நல்ல பார்மில் இருக்கும் சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்காமல் சொதப்பும் பண்டுக்கு மீண்டும் மீண்டும் ஏன் வாய்ப்பை வழங்குகிறது என பிசிசிஐ மீது கேள்வி எழுப்பி கடும் கோபத்தில் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை அள்ளி வீசி வருகின்றனர்.. நடந்து முடிந்த ஆசிய கோப்பை, டி20 உலகக் கோப்பை, தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து தொடர் என அனைத்திலும் சாம்சன் புறக்கணிக்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/talimshah12/status/1597829671173128194

Categories

Tech |