திருமண விழாவில் எடுக்கப்பட்ட வீடியோவை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலாபால். கடந்த 2010ஆம் ஆண்டு மைனா படத்தின் மூலம் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து, விஜய், தனுஷ், போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். மேலும், தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
நடிகை அமலாபால், இயக்குனரான ஏ.எல். விஜய்யை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில்,நேற்று நடைபெற்ற தனது தம்பியின் திருமண விழாவில் எடுத்த வீடியோ பதிவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/CUplv5illLN/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again