தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென் ஆப்பிரிக்கா அணி 3 ஒருநாள் போட்டி விளையாடுகின்றது. முதல் ஒரு நாள் போட்டி ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் நடைபெறும் நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்ட்டுள்ளனர்.விராட் கோஹ்லி (கேப்டன்) , ஷிகர் தவான், பிருத்வி ஷா, கே.எல்.ராகுல், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், யூஸ்வேந்திர சபால் , குல்தீப் யாதவ், சுப்மான் கில் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளார். ரோஹித் சர்மா விளையாடுவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக பிருத்வி ஷா களமிறங்குகின்றார்.