Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களே!!!… கொண்டாட்டத்திற்கு ரெடியா….? ஒரே நாளில் ரிலீசாகும் துணிவு, வாரிசு டிரைலர்?…. புத்தாண்டில் செம ட்ரீட்….!!!!

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வரும் தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது.

துணிவு திரைப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 3-ம் பாடலான கேங்ஸ்டா டிசம்பர் 25-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன் பிறகு தளபதி விஜய் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், ரஞ்சிதமே, தீ தளபதி மற்றும் அம்மா சென்டிமென்ட் பாடல் போன்றவைகள் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் வாரிசு படத்தின் டிரைலர் டிசம்பர் 31-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று தகவல் வெளியான நிலையில், தற்போது துணிவு திரைப்படத்தின் டிரைலர் வீடியோவும்  டிசம்பர் 31-ஆம் தேதி ரிலீசாக போவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் துணிவு திரைப்படத்தின் டிரைலர் வீடியோவை துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கட்டிடம் மற்றும் நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர் ஆகிய இடங்களில் திரையிட பட குழு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |