சூர்யா ரசிகர்கள் ‘சிங்கம்’ படத்தின் சாதனையை கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘சிங்கம்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. இதைதொடர்ந்து சூர்யா தனது அடுத்தடுத்த வெற்றி படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தள பக்கங்களில் சிங்கம் படம் வெளியாகி 11 ஆண்டுகள் கடந்ததை ஹேஷ்டேக் மூலம் பதிவு செய்து கொண்டாடி வருகின்றனர். தமிழில் வெற்றி கண்ட சிங்கம் திரைப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு பல கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.