நடிகர் விஜய் நடித்து வரும் படங்களில் ஏதேனும் ஒரு பாடலை படுவதை வெறித்தனமாக வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிப்பை தாண்டி தன்னுடைய வசீகரக் குரலால் பாடல் பாடி பலரின் பாராட்டை பெற்று ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விஜய். இவர் படத்தில் பாடுவது 1994-ஆம் ஆண்டு துவங்கியது. ரசிகன் திரைப்படத்தின் தேவா இசையில் இடம்பெற்ற “பாம்பே சிட்டி” பாடலை விஜய்யே பாடியிருந்தார்.விஜய் குரலுக்கு என்று இருந்த வசீகரம் அவருக்குன்னு தனிப்பட்ட ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது.
இதன் பின்னர் தன்னுடைய திரைப்படங்களிலும், தந்தையின் திரைப்படங்களிலும் விஜய் பாடத் துவங்கினார்.அடுத்தடுத்து அவர் பாடிய பாடல்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றாலும் , 1995ஆம் ஆண்டு விஷ்ணு திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ”தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா” பாடல் ரசிகர்களிடையே மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. தேவாவின் இசையில் வாலியின் வரியில் இடம் பெற்றிருந்த இந்த பாடலுக்கு பிறகு துள்ளலான பாடல்களை பாடுவதற்கு நடிகர் விஜய்யே இசையமைப்பாளருக்கு முதல் தேர்வாக மாறினார்.
தொடர்ந்து தேவாவின் இசையில் மட்டும் பாடிக் கொண்டிருந்த விஜய் 1996 ஆம் ஆண்டு உருவான கோயமுத்தூர் மாப்பிள்ளை திரைப்படத்தில் வித்யாசாகரின் இசையில் ”பாம்பே பாடலை” பாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தாலும் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தில் விஜய் பாடியிருந்த ”ஊர்மிலா ஊர்மிலா” என்ற பாடல் விஜய்யின் குரலுக்காகவே மிகப் ரசிகர் பட்டாளத்தை தமிழகமெங்கும் உருவாக்கிக் கொடுத்தது. இந்த பாடலிலும் விஜயின் தேவா இசையமைத்திருந்தார்.
இதன் பிறகு பல இசையமைப்பாளர்களோடு இணைந்து பணியாற்றிய விஜய் தேவாவின் மகனான ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் தலைமுறையைக் கடந்து பகவதி திரைப்படத்தில் 2002ஆம் ஆண்டு ”கொக்கோ கோலா ப்ரவுன் கலருடா” என்ற பாடலை பாடினார். தான் நடிக்கக்கூடிய திரைப்படங்களில் ஒரு பாடலாவது பாடுவதை வழக்கமாக வைத்திருந்த விஜய் 2005 ஆம் ஆண்டு ஜான் மகேந்திரன் இயக்கத்தில் டிஎஸ்பி இசையில் வெளியாகியிருந்த ”வாடி வாடி” பாடலுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் பாடுவதைத் தவிர்த்து வந்தார்.
பின்னர் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு மட்டுமே கவனம் செலுத்தி வந்த நடிகர் விஜய் 2012-ஆம் ஆண்டு மீண்டும் துப்பாக்கி திரைப்படத்திற்காக பாடத் துவங்கினார். முருகதாஸ் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி இருந்த இந்த திரைப்படத்திற்காக ”கூகுள் கூகுள் பாடலை” விஜய் பாட அந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் மீண்டும் ஹிட்டடித்தது. பாடலுக்குரிய இசை நுணுக்கங்களை திறம்பட கையாள்வதும் , விஜய்யின் வசிய குரலும் ஒரு பாடளுக்கு எளிதாக வெற்றி கிடைக்கிறது என்று இசையமைப்பாளர்களின் கண்களை உறுத்தியது.
இதனால் இசை அமைக்கும் படத்தில் நடிகர் விஜய்யை ஒரு பாடலை பாட வைத்து விட வேண்டுமென்று இசையமைப்பாளர்களும் கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கினர். மேலும் விஜய் ரசிகர்களும் விஜய்யின் திரைப்படத்தில் அவருடைய குரலை எதிர்பார்த்தது காத்திருந்தால் விஜய் ஒவ்வொரு திரைப்படத்திலும் பாடுவதை வழக்கமாக மாற்றினர். துப்பாக்கி திரைப்படத்திற்கு பிறகு தலைவா , ஜில்லா , கத்தி , புலி , தெறி , பைரவா என நடிக்கக்கூடிய எல்லாத் திரைப்படங்களும் ஒரு பாடலை பாடுவதை வழக்கமாக வைத்திருந்தார் நடிகர் விஜய்.
இசையமைப்பாளர் தேவா தொடங்கி பல இசையமைப்பாளரின் இசையில் பாடக் கூடிய வாய்ப்பு விஜய்க்கு கிடைத்தாலும் ஏ.ஆர் ரகுமானின் இசையில் பாட கூடிய வாய்ப்பு மட்டும் விஜய்க்கு அமையாமல் இருந்து வந்தது.இந்நிலையில் ஏ ஆர் ரகுமான் விஜய் மீண்டும் கூட்டணி அமைத்த பிகில் திரைப்படத்தில் விஜய் படுவது சாத்தியப்படுமா என்று விஜய் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் வெறித்தனம் என்ற பாடலை விஜய் பாட அது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் சென்னை வட்டார மொழியில் விஜயின் குரலில் இது ஒரு கானா பாடலாக அமைந்திருக்கிறது ரசிகர்களின் வெறித்தனத்தை இன்னும் அதிகரித்துள்ளது.