Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

ரசிகர்களே..! நிர்வாகிகளே…. சொல்லுறதை செய்யுங்க…. நடிகர் விஜய் அதிரடி உத்தரவு….!!

மக்களுக்கான உதவிகளை தொடர்ந்து செய்யுங்கள் என மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் விஜய் அறிவுறுத்தி இருக்கிறார்.

விஜய் மக்கள் இயக்கத்தின் புதிய நிர்வாகிகள் சில மாவட்டங்களில் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்களுடன் நேற்று தன்னுடைய பனையூரில் இருக்கக்கூடிய அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை விஜய் ஆலோசனை நடத்தினார். இதில் திருச்சி, மதுரை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினார்கள். இதிலென்ன விவாதிக்கப்பட்டது என்பது ? குறித்து தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

குறிப்பாக மக்களுக்கான பணிகளை தொடர்ந்து செய்யுங்கள் என்று விஜய் தன்னுடைய நிர்வாகிகளுக்கு வலியுறுத்தி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் உதவிகளை செய்யும் போது,யாரிடமும் கடன் வாங்காமல் செய்ய வேண்டும். அதே சமயம் பெற்றோர்களை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதையும் கூறி இருக்கின்றார்.

உதவிகள்  தேவைப்படும்போது தேவையான நேரத்தில் வழக்கம் போலவே நானும் உதவி செய்கிறேன் என்று நிர்வாகிகளுடைய ஆலோசனையில் விஜய் தெரிவித்திருக்கிறார். விஜய் மக்கள் இயக்கத்தின் பணியை செய்யும் போதோ…  வேலைகளில், தொழில்களில் கவனத்தை விட்டுவிட வேண்டாம். அதிலும் கவனம் செலுத்திக் கொண்டே தன்னுடைய இயக்கத்திற்கான வேலைகளை பணிகளை செய்யுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

குறிப்பாக இந்த காலகட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் என்னென்ன பணிகளை செய்தது ? எந்த மாதிரியான உதவிகளை செய்தது ? என்பது குறித்தெல்லாம் கேட்டு அறிந்து அதற்க்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார். அதேசமயம் இன்னும் என்னென்ன செய்யலாம் ? உறுப்பினர்கள் சேர்க்கை எப்படி இருக்கிறது ? என்பது குறித்தெல்லாம் நிர்வாகிகள் விஜயிடம் எடுத்துக் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

Categories

Tech |