Categories
சினிமா தமிழ் சினிமா

சபரிமலையில் துணிவை தொடர்ந்து வாரிசுக்கு பேனர் வைத்த ரசிகர்கள்…. படம் வெற்றி பெற சிறப்பு வழிபாடு….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே மற்றும் 2- பாடலான ரஞ்சிதமே தீ தளபதி போன்றவைகள் வெளியாகி  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வாரிசு படத்தின் 3-ம் பாடலை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்பாடல் பாடகி சித்ரா குரலில் அம்மா சென்டிமென்ட் பாடலாக உருவாகியுள்ளது. இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் மயிலாடுதுறையைச் சேர்ந்த நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர்களான மணிகண்டன் மற்றும் சுபாஷ் ஆகியோர் வாரிசு திரைப்படம் வெற்றி பெறுவதற்காக சபரிமலை கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு 18-ஆம் படி அருகில் வாரிசு பேனரை உயர்த்தி பிடித்து பூஜை செய்துள்ளனர். வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் நிலையில் முன்னதாக துணிவு திரைப்படம் வெற்றி பெற வேண்டி அஜித் ரசிகர்கள் சபரிமலைக்கு சென்று பேனர் வைத்திருந்தார்கள். இதைத்தொடர்ந்து தற்போது வாரிசு படம் வெற்றி பெற வேண்டி விஜய் ரசிகர்கள் சபரிமலைக்கு சென்றுள்ளார்கள். மேலும் இது தொடர்பான புகைப்படம் தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |