என்னை திட்டாதீர்கள் என்று கர்ணன் பட நடிகர் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘கர்ணன்’. இத்திரைப்படம் முதல் நாளிலேயே 10 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. இதை தொடர்ந்து ரசிகர்கள், திரைபிரபலன்கள் இப்படத்தினை பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
இப்படத்தில் நடித்த தனுஷை தொடர்ந்து அடுத்ததாக அதிக பாராட்டுகளைப் பெறுபவர் நடிகர் நட்டி நட்ராஜ். இவர் கர்ணன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்நிலையில் கர்ணன் படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும் நட்டி நட்ராஜை திட்டி மெசேஜ் செய்து வருகின்றனர்.
ஆகையால் நட்டி நட்ராஜ் இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என்ன திட்டதீங்க எப்போவ். ஆத்தோவ். அண்ணோவ். கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன். போன் மெசேஜ்ல திட்டாதீங்கப்பா. முடியிலப்பா. அது வெறும் நடிப்புப்பா..ரசிகர்களுக்கு எனது நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
என்ன திட்டதீங்க எப்போவ்.. ஆத்தோவ்..அண்ணோவ்…கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன்..phone messagela..திட்டாதீங்கப்பா..முடியிலப்பா..அது வெறும் நடிப்புப்பா..ரசிகர்களுக்கு எனது நன்றி…🙏🙏🙏
— N.Nataraja Subramani (@natty_nataraj) April 11, 2021