பீஸ்ட் படம் குறித்து வெளியான முக்கிய தகவல் ஷாக்கில் ரசிகர்கள்.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமான விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படமானது வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் செல்வராகவன் மிரட்டுகிறார்.படத்தின் அப்டேட்கள் அவ்வபோது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கின்றது.
இப்படத்தில் இருந்து வெளியாகிய பாடல்களும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் பீஸ்ட் படம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. என்னவென்றால் பீஸ்ட் படத்தின் இரண்டு பாடல்கள் மட்டுமே உள்ளதாம். 2 மணிநேரம் 35 நிமிடங்கள் உள்ள படத்தில் நடுவில் அரபி குத்து பாடலும், கடைசியில் ஜாலியோ ஜிம்கானா பாடலும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது என்ற தகவல் ரசிகர்கள் தலையில் இடியாய் இறங்கியுள்ளது.