ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்வர் தோனியின் ஓய்வை குறிப்பிட்டு ரசிகர்களுக்காக பிபிசியிடம் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
நட்சத்திரங்களைப் போல் எண்ணிலடங்காத ரசிகர்களை கொண்டுள்ள பிரபல கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி, இன்டர்நேஷனல் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவரது ஓய்வு அறிவிப்பு கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடியை இறக்கியுள்ளது. அதிர்ச்சியை தாங்க முடியாமல் கண்ணீர் கடலில் ரசிகர்கள் மிதந்து வரும் சூழ்நிலையில், அவரது ஓய்வு குறித்து பல பிரபலங்களும், திரையுலகினரும், அரசியல் தலைவர்களும் தொடர்ந்து தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தோனியை கவுரவிக்கும் வகையில், தோனிக்கான இறுதி போட்டியை ராஞ்சியில் நடத்த வேண்டும் என பிசிசிஐக்கு ஜார்கண்ட் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது ஓய்வை தாங்க முடியாமல் தவிக்கும் ரசிகர்களுக்காகவும் இந்த போட்டியை நடத்த வேண்டும் எனவும், கல்லூரியிலிருந்து மாணவர்கள் பிரிந்து சொல்லும்போது ஃபேர்வெல் எனும் விழாவை கொண்டாடி மகிழ்ச்சியாக செல்வார்கள். அதேபோல் தோனிக்காக இந்த ஃபேர்வெல் போட்டியை நடத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.