டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக பஞ்சப்பட்டியில் உள்ள விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்திலுள்ள லாலாபேட்டை பகுதியில் நேற்று அகில இந்திய போராட்டக்குழு சார்பில் சாலை மறியல் நடைபெற்றுள்ளது. இந்த மறியலில் பஞ்சம்பட்டி வாழ் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இதில் பெண்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் இவர்கள் “டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மூன்று வேளாண் சட்டங்களில் உள்ள அடக்குமுறைகளை கைவிட வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சப்பட்டி வீதியில் நேற்று ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 23 விவசாயிகளை லாலாப்பேட்டை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.