விவசாய சங்கத்தினர் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசின் வேளாண்மை திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் இன்றுடன் ஆறு மாதங்கள் ஆனதால் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் இந்த நாளை கருப்பு தினமாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் உள்ள துரைசாமிபுரம் பகுதியில் உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்ட விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு குழுவினர் இணைந்து வீடுகள் தோறும் கருப்புக் கொடி கட்டியும் கைகளில் கறுப்புக்கொடி ஏந்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரியும் மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பியுள்ளனர்.