சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே விவசாயி ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த கிழவனி கிராமத்தில் அருளானந்து என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று திருவேகம்பத்தூரிலிருந்து ஊருக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது இடி மின்னல் மற்றும் பலத்த காற்று வீசியுள்ளது. மேலும் அதனை தொடர்ந்து மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
இதனால் அருளானந்து களத்தூர் அருகே ஒரு பனை மரத்தின் கீழ் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென தோன்றிய மின்னல் அவர் மீது தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து திருவேகம்பத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.