மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் கிராமத்தில் விவசாயியான குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆடுகளுக்கு தீவனம் படிப்பதற்காக ஒரு குச்சியில் அரிவாளை கட்டி வீட்டின் அருகில் இருக்கும் வேப்பமரத்தில் குமார் தழைகளை பறித்து கொண்டிருந்தார். அப்போது ஈரமாக இருந்த குச்சி எதிர்பாராதவிதமாக அங்கிருந்த மின்கம்பி மீது உரசிவிட்டது.
இதனால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே குமார் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.