விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குரும்பலூர் பகுதியில் விவசாயியான வாசுதேவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராமேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான வாசுதேவன் அடிக்கடி தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து வேலைக்கு சென்ற ராமேஸ்வரி மாலை நேரத்தில் வீட்டிற்கு சென்று பார்த்த போது வாசுதேவன் திடீரென இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று வாசுதேவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் வாசுதேவனின் தந்தையான கலியமூர்த்தி என்பவர் தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.