மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிறுவனூர் கிராமத்தில் விவசாயியான வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தோட்டத்திற்கு சென்று தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது பயிர்களை காப்பதற்காக மின்சார வேலி அமைக்கப்பட்டிருந்தது. இதில் வேல்முருகன் தவறுதலாக மிதித்துவிட்டார்.
இதனால் வேல்முருகன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.