மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள துர்க்கை பாளையம் கிராமத்தில் சிவப்பா என்பவர் வசித்து வருகிறார். இவரும் அப்பகுதியில் வசிக்கும் விவசாயி முனிராஜி என்பவரும் தேன்கனிக்கோட்டையில் இருந்து கெலமங்கலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இந்நிலையில் திரட்டி பிரிவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ராஜி என்பவர் மீது இவர்களின் மோட்டார் சைக்கிளில் எதிர்பாராதவிதமாக மோதி விட்டது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த முனிராஜி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் முனிராஜ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ராயக்கோட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.